Sinhala (Sri Lanka)English (United Kingdom)
கமத்தொழில், கமத்தொழில் அபிவிருத்தி, மிருக உற்பத்தி, உள்நாட்டு கடற்றொழில், சுற்றாடல், சுற்றுலாதறை அமைச்சு
முகப்பு சேவைகள்

விவசாயிகளுக்கு வழங்கப்படும் சேவைகள்

  • நவீன விவசாய தொழிநுட்ப அறிவினை விவசாயிகளுக்கப் பெற்றுக் கொடுத்தல்.
  • மாதிரிகள் மற்றும் வெளிக்கள பயிற்சிகள் மூலம் விவசாயிகளை விழிப்பூட்டல்.
  • மண்ணை பரீட்சித்து உரம் பற்றிய சிபாரிசுகளை வழங்குதல்.
  • அறுவடையின் பின்னான தொழிநுட்ப முறைகளை அறிமுகம் செய்தல்.
  • புதிய பயிர் வகைகளை அறிமுகம் செய்தல்.
  • ஆராய்ச்சிகள், பரீட்சித்துப் பார்த்தல்கள் போன்ற விடயங்களை விவசாயத் துறையினுள் மேற்கொள்ளல்.
  • விவசாயத்துடன் தொடர்புடைய போட்டிகளை நடாத்துதல்.
  • நவீன விவசாய இயந்திரங்களை விவசாயிகளுக்கு அறிமுகம் செய்தல்.
  • ஊவா மாகாண விவசாய செய்திகள் மற்றும் விவசாயத் தகவல்களை பொதுமக்களுக்கு வழங்குதல்
  • புதிய வகைகள் மற்றும் பயிரின வகுப்புக்களை மாகாணத்தினுள் பரப்புதல்.
  • சிறிய விவசாயக் குழுக்களை உருவாக்குதல் மற்றும் அதனூடாக செயற்திட்ட முறைமையினை நடைமுறைப்படுத்தல்.
  • விவசாய கண்காட்சிப் பணிகள்.
  • விவசாயிகளுக்குத் தேவையான விதைகள் மற்றும் நாற்று வகைகளை உற்பத்தி செய்தல்.
  • விவசாய மானியங்களை விவசாயிகளிடம் பிரபல்யப்படுத்தல்.
  • சேதன பசளை உற்பத்திகளை பரப்புதல்.
  • விலங்குக் கட்டுப்பாடு நடவடிக்கைகளுக்கு பங்களிப்புச் செய்தல்.
  • பழைய நெல் வகைகள் தொடர்பான விஸ்தரிப்புப் பணிகள்.
  • வேலையற்ற இளைஞர், யுவதிகளை விவசாய பணிகளின் பக்கம் கவனம் ஈர்க்கச் செய்தல்.
  • வீட்டுத் தோட்டங்களை அபிவிருத்தி செய்தல்.
  • விவசாய சங்கங்களை நிறுவுதல்.
  • இளம் விவசாய சங்கங்களை நிறுவுதல்.

 

ஊவா மாகாண விவசாயத் திணைக்களத்தினால் பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து பெற்றுக்கொடுக்கப்படும் சேவைகள்.

  • நவீன விவசாயத் தொழிநுட்ப அறிவினை பல்வேறு நிறுவனங்களுக்குப் பெற்றுக்கொடுத்தல்.
  • உரம் பற்றிய சட்டத்தையும், மண்ணை பேணிப் பாதுகாத்தல் பற்றிய சட்டத்தையும் நடைமுறைப்படுத்தல்.
  • கிருமி நாசினிகள் சட்டத்தை நடைமுறைப்படுத்தல்.
  • போகப் பயிர்கள் வகைப்படுத்தலின் கீழ் இணங்காணப்பட்ட பயிர் வகைகளாக பரப்புதல்.
  • விவசாய உற்பத்தி விற்பனை மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
  • போகங்களுக்கு ஏற்ப பிரதேசத்திற்குப் பொருத்தமான போகப் பயிர்கள் பற்றிய நிகழ்ச்சித் திட்டங்களை திட்டமிடல் மற்றும் நடைமுறைப்படுத்துவதற்கு பங்களிப்புச் செய்தல்.
  • விவசாய புள்ளிவிபரங்கள் மற்றும் தரவுகளை ஒன்றதிரட்டல்.
  • வெளிநாட்டு அனுசரணையினைப் பெறும் விவசாய செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தல்.
  • மாகாணத்தினுள் மண் மற்றும் நீர் என்பவற்றினைப் பேணிப் பாதுகாக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்தல்.
  • மாகாண இயற்கை வளங்களைப் செயற்படுத்தல்.

 

ஊவா மாகாண விவசாயத் திணைக்களத்தினால் விநியோகப் பணிகளை விஸ்தரி;ப்பதற்காக மேற்கொள்ளப்படும் சேவைகள்.

  • பதிவு செய்த சொந்த நாற்றுமேடை உரிமையாளர்களுக்கான புதிய பயிரின வகுப்புக்களின் நடுகைப் பொருட்களை வழங்குதல்.
  • விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட கைத்தொழில்களை அறிமுகம் செய்தல் மற்றும் அந்த உற்பத்தி வகைகளை சந்தைப்படுத்துவதற்கு பங்களிப்புச் செய்தல்.
  • விவசாய உற்பத்தி ஏற்றுமதி நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தல்.
  • முன் ஒப்பந்த உற்பத்தி நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தல்.
  • விவசாய உற்பத்திப் பொருட்களை இலகு விலையில் விற்பனை செய்வதற்கு பங்களிப்பு செய்தல்.
 
ஜூன் 2020
S M T W T F S
31 1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30 1 2 3 4